ரெயிலில் அடிபட்டு பெண் சாவு

ரெயிலில் அடிபட்டு பெண் சாவு

Update: 2022-11-01 20:00 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் (வயது 85) இவர் திருச்செந்தூரில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து ெரயிலில் நேற்று மாலை சோழவந்தானுக்கு வந்தார். பிளாட்பாரத்திலிருந்து வெளியே வருவதற்கு தண்டவாளத்தை கடந்தபோது, சென்னையிலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற ரெயில் பாப்பாத்தி அம்மாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து மதுரை ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்