மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Update: 2022-06-24 19:05 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள லத்துவாடி ஊராட்சி நல்லையகவுண்டன் புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜ் (வயது 55). இவரது மனைவி பாவாயி (50). நேற்று முன்தினம் இரவு பாவாயி நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சேந்தமங்கலம் அருகே துத்திகுளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் பாவாயி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பாவாயி இறந்து விட்டதாக கூறினர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ்குமார் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜ் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்