கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் சாவு

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-06-13 18:45 GMT

தியாகதுருகம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் செல்வகுமார். இவர் சம்பவத்தன்று தனது தாய் முத்துக்கண்ணுவை(வயது 58) மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தனியார் ரைஸ் மில் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணம் செய்த முத்துக்கண்ணு மயங்கி திடீரென சாலையில் கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்