சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த கணவர் மாயமானதாக போலீசில் பெண் புகார்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த கணவர் மாயமானதாக போலீசில் பெண் புகார் செய்தாா்.

Update: 2022-09-22 10:30 GMT

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ள இவர், கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்தார். கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக அவருடைய மனைவி காவியாவிடம் கூறி இருந்தார். ஆனால் துபாயில் இருந்து சென்னை வந்தவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காவியா, மணிகண்டனின் ெசல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து காவியா சென்னை விமான நிலையத்துக்கு வந்து விமான நிலைய மேலாளரிடம் கூறி பயணிகள் வருகை பதிேவட்டை பார்த்தார். அதில் மணிகண்டன் விமானத்தில் வந்து வெளியே சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் கணவரை காணாமல் அதிர்ச்சி அடைந்த காவியா, இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீசார், மணிகண்டனின் நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, 19-ந்தேதி துபாயில் இருந்து வந்த மணிகண்டன் தனது அறையில் ஓய்வெடுத்துவிட்டு திருப்பதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக கூறினார். அவரது உடைமைகளும் நண்பர் அறையில் இருந்தது. உடைமைகளை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மணிகண்டன், விமான நிலைய போலீசார் முன் ஆஜரானார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்