தீக்குளித்து பெண் தற்கொலை
முத்துப்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
முத்துப்பேட்டையை அடுத்த செம்படவன்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 25). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.