லாலாபேட்டை அருகே உள்ள வரகூரை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி இளவரசி (வயது 55). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றும் வயிற்று வலி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இளவரசி மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பரவி பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் இளவரசியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இளவரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இளவரசியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.