பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-09 18:33 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி வடக்கு தெருவை சேர்ந்தவர் சாந்தா (வயது 65). இவரது மகன் ராஜசேகர். இவருக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. மகனுக்கு திருமணம் ஆகாதாத விரக்தியில் இருந்த சாந்தா நேற்று வீட்டில் வைத்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்