தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-25 00:30 GMT


கோவை


கோவை பாப்பநாயக்கன்பாளையம், காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூரணி (வயது 55) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பூரணி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று பூரணி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.இந்த நிலையில் அவர் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், பூரணி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்த 25 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்