கிணற்றில் குதித்து பெண் தற்கொலை‌

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை‌

Update: 2022-06-20 18:29 GMT

கமுதி

விருதுநகர் மாவட்டம் நல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது 47). இவரது மகள் பானுமதி(22). இவருக்கும், கஜேந்திரனின் சகோதரி மகன் சிவாவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.. இவர்கள் இடையே சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டதால், மனவேதனையில் கிணற்றில் குதித்து பானுமதி தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து பரளச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்