கருமத்தப்பட்டி
கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கைத்துறையைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஷர்மிளா தேவியை (வயது27) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாகராயம்பாளையத்திலுள்ள மனோஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில்ஷர்மிளா கடந்த 5 மாதத்துக்கு முன்பாக குழந்தை பேறுக்காக தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தோற்று ஏற்பட்டதில் இருந்து சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நேற்று முன்தினம் துரைசாமி மற்றும் அவரது மனைவி இருவரும் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஷர்மிளா தேவி குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இநத்நிலையில் ஷர்மிளா தேவி வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவர் தந்தை அளித்த புகாரின் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------------
----
Reporter : Andiyappan Location : Coimbatore - KARUMATHAMPATTY