பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-04 19:07 GMT

நெல்லை:

நெல்லை அருகே உடையார்பட்டி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவருடைய மனைவி அமுதா (வயது 35). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அமுதாவிற்கு ஒரு மகள் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்