பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-04 18:03 GMT

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை.யை அடுத்த கட்டேரி தேங்காய் தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேனகாகாந்தி (வயது 35). இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில வருடங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மேனகாகாந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சகோதரர் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌.

Tags:    

மேலும் செய்திகள்