பெண் தீக்குளித்து தற்கொலை

சின்னசேலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-19 17:40 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54) இவரது மகள் பவித்ரா (22). இவர் சின்னசேலம் அடுத்த தத்தாதிரிபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் பாண்டியன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதில் மனமுடைந்த பவித்ரா தன் மீது மண்ணெண்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்