தந்தை, அண்ணன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
வல்லநாடு அருகே தந்தை, அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே தந்தை, அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்தார்
வல்லநாடு முருகன்புரம் அருகே உள்ள கோனார்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். விவசாயி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 31). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் பேச்சியம்மாளின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். மேலும் அவருடைய அண்ணன் பெருமாளும் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் பலியானார்.
இதனால் அதில் இருந்து பேச்சியம்மாள் மிகவும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் துக்கம் தாங்காமல் பேச்சியம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் விஷம் குடித்தார்.
சாவு
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் தில்லைராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.தந்தை, அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் பேச்சியம்மாள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.