கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-27 19:33 GMT

சூரமங்கலம்:

கள்ளக்காதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பிரேமா (வயது 34). இவருக்கும், சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த மேஜர் பாபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சரவணன், தனது மனைவி பிரேமாவை கண்டித்தார். இதனால் பிரேமா மேஜர் பாபுவுடன் இருந்த தொடர்பை துண்டித்தார்.

இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரேமா, தனது கள்ளக்காதலன் மேஜர் பாபுவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மேஜர் பாபுவின் உறவினர்கள், சரவணனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் சரவணன் மீண்டும் பிரேமாவை கண்டித்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமா கோபித்து கொண்டு, சேலம் வந்தார். அவர் சேலம் திருவாக்கவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையோரம் மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, விஷம் குடித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். சூரமங்கலம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்