விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-24 18:41 GMT

குளித்தலை அருகே உள்ள ரெங்காச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 42). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வயிற்று வலி அதிகமான காரணத்தினால் வீட்டில் இருந்த களைக்கொல்லி விஷம் மருந்தை வெள்ளையம்மாள் குடித்துள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் வெள்ளையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்