பெண் விஷம் குடித்து தற்கொலை
கண்ணமங்கலம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு வேடக்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி.
அவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர், நேற்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.