விஷம் குடித்து பெண் தற்கொலை
விழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள நந்திவாடி என்ற ஊரை சேர்ந்தவர் இளங்கோ மனைவி விஜயா(வயது 40). இவரது கணவர் இறந்துவிட்டதால் மேல் காரணியில் உள்ள தனது தங்கை சுகுணா வீட்டில் இருந்து வந்த விஜயாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தாங்க முடியாத வயிற்று வலியால் அவதி அடைந்த விஜயா விஷத்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.