விஷம் குடித்து பெண் தற்கொலை

ரிஷிவந்தியம் அருகே கடன் பிரச்சினையால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-12 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே வாணாபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தேன்மொழி (வயது 55). இவருக்கு அதிகமாக கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் கழிவறையில் தேன்மொழி இறந்து கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே பகண்டை கூட்டுரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கடன் பிரச்சினையில் தேன்மொழி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து தேன்மொழியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்