அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை

அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-27 22:01 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் ராஜவீதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி தங்கம்மாள் (வயது 68). தங்கம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. அப்படி இருந்தும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மனம் உடைந்த தங்கம்மாள், அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கம்மாள் இறந்து விட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்