நகை பறிக்க முயன்ற பெண் கைது

தக்கலையில் சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பெண் கைது

Update: 2022-08-23 17:34 GMT

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது37). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் சாந்தகுமாரி தக்கலை பஸ் நிலையம் அருேக நடந்து சென்று ெகாண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்து கொண்டிருந்த பெண் சாந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தகுமாரி கையால் தடுத்தார். உடனே அந்த பெண், சாந்தகுமாரியின் கையில் இருந்த ரூ. 200-யை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து சாந்தகுமாரி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்தநிலையில் மணலி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர். அப்போது, அவர் கேரள மாநிலம் பாலக்காடு, மஞ்சகுப்பத்தை சேர்ந்த செந்தில் மனைவி கவிதா (35) என்பதும், சமையல்காரியிடம் நகை பறிக்க முயன்று, பணம் பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்