கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் கைது

கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் கைது

Update: 2022-11-25 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம். இவருடைய மனைவி சர்மிளா. இவர் தனது மகளின் படிப்பு செலவிற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோர்ஹவுஸ் பகுதியை சேர்ந்த பூங்கொடி(வயது 52) என்பவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் கேட்டார். அவர் அதற்கு ஈடாக பூர்த்தி செய்யப்படாத 2 காசோலைகள் மற்றும் புரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்தார். மேலும் அதிலிருந்து அதற்கு உரிய வட்டியாக ரூ.4 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையையே கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து முறையாக வட்டி கட்டி வந்த. நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 4 மாதங்களாக சர்மிளாவால் வட்டி கட்ட முடியவில்லை. ஆனால் பூங்கொடி தன்னிடம் வாங்கிய பணத்திற்கு அசலும், வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றுக்கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 11-ந் தேதி சர்மிளாவின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சர்மிளா, கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து, பூங்கொடியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்