கடலூர் பஸ் நிலையத்தில் தபால் அலுவலரிடம் ரூ.2 ஆயிரம் திருடிய பெண் கைது

கடலூர் பஸ் நிலையத்தில் தபால் அலுவலரிடம் ரூ.2 ஆயிரம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-17 18:45 GMT

கடலூர் கூத்தப்பாக்கம் வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மனைவி நந்தினி (வயது 29). இவர் தொண்டமாநத்தம் கிராமத்தில் தபால் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து டி.புதுப்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.

அப்போது அவருக்கு பின்னால் இருந்த ஒரு பெண் திடீரென அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை, கைப்பையுடன் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். இதை பார்த்த நந்தினி கூச்சலிட்டதால், சக பயணிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் விசாரித்த போது, அவர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி தேன்மொழி (27) என்று தெரிந்தது. இது பற்றி நந்தினி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேன்மொழியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்