மூதாட்டியிடம் பணம் திருடிய பெண் கைது

மூதாட்டியிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-26 19:03 GMT

விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 30). இவரும், இவருடைய தாய் கலைவாணி (60) என்பவரும் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்சில் சென்றனர். விழுப்புரம் காந்தி சிலை பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது பெண் ஒருவர், கலைவாணி வைத்திருந்த துணிக்கடை பையில் இருந்த பர்சை ரூ.500-உடன் திருடினார். உடனே அந்த பெண்ணை கோகுல், கையும், களவுமாக மடக்கிப்பிடித்து விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த பெண், திருவண்ணாமலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி கவுசல்யா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவுசல்யாவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்