வீட்டில் பணத்தை திருடிய பெண் கைது

வீட்டில் பணத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-22 21:32 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம் கடை வீதியை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு சாவியை, வீட்டு ஓட்டின் மேல் பகுதியில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5,250 திருட்டு போயிருந்தது. இதற்கிடையே, அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு பெண் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அவரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து சிதம்பரநாதனின் மனைவி சுலோச்சனா கொடுத்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் லால்குடி அருகே உள்ள அரியூர் கிழக்கு தெருவை சேர்ந்த ரெங்கராஜின் மகள் மேனகாகாந்தி (32) என்பதும், அந்த வீட்டில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்