பஸ்சில் பயணிகள் கவனத்தை திசை திருப்பி பணம் திருடிய பெண் கைது

பஸ்சில் பயணிகள் கவனத்தை திசை திருப்பி பணம் திருடிய பெண் கைது

Update: 2023-04-11 19:53 GMT

தஞ்சையில் பஸ்சில் பயணிகள் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகளிடம் பணம் திருட்டு

தஞ்சை மாநகரில் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை மர்ம நபர்கள் திருடி செல்வது அடிக்கடி நடைபெற்று வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை கீழ வண்டிக்காரத்தெருவை சேர்ந்த வீரமணியிடம் ரூ.35 ஆயிரம், ரெட்டிப்பாளையம் தெற்கு மூப்பனார் தெருவை சேர்ந்த கவிதாவிடம் ரூ.25 ஆயிரம், பாபநாசம் மேலவழுத்தூரை சேர்ந்த சிவானந்தத்திடம் ரூ.50 ஆயிரமும் திருட்டுப்போனது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ஒரு பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பெண் கைது

விசாரணையில் அவர் தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதி மேலத்தெருவை சேர்ந்த அபிராமி(வயது34) என்பதும் அவர் தான்

மேற்கண்ட 3 பேரிடமும் இருந்து பணத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. அபிராாமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்துக்கு 10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அபிராமி மீது தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஜேப்படி தொடர்பான வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்