மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

Update: 2023-04-17 18:45 GMT

கோவை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தாமணி(வயது 69). இவர் நேற்று முன்தினம் பொருட்கள் வாங்குவதற்காக ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக பிரகாசம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அவரது பின்னால் நின்றிருந்த பெண் ஒருவர் நைசாக சாந்தாமணி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி சாந்தாமணி அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை மடக்கி பிடித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், மூதாட்டியிடம் நகை பறித்தது கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த அம்மாச்சி ஈஸ்வரி (33) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்