குழந்தைகளிடம் 2 கிராம் தங்க தாயத்தை திருடிய பெண் கைது

குழந்தைகளிடம் 2 கிராம் தங்க தாயத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-09 19:12 GMT

அறந்தாங்கி அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி ராமேஸ்வரி. இவரது உறவினர் வேட்டனூர் கிராமத்தை சேர்ந்த சோணமுத்து மனைவி புனிதா. இவர்கள் இருவரும், தங்களது குழந்தைகளுடன் நேற்று அறந்தாங்கி கட்டுமாவடியில் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தனர். பின்னர் அங்குள்ள பேன்சி ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு அறந்தாங்கி பஸ் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது ராமேஸ்வரி மகள் முகிலரசி கழுத்தில் இருந்து 1 கிராம் தங்க தாயத்தையும், புனிதா மகள் தக்ஷனா கழுத்தில் அணிந்திருந்த 1 கிராம் தங்க தாயத்தையும் காணவில்லை என்றவுடன் கதறி அழுதனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் ஒரு பெண் குழந்தைகளின் கழுத்தில் கிடந்த தங்க தாயத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் ஆவுடையார்கோவில் நெட்டியேந்தல் கிராமத்தை சேர்ந்த பாண்டிமுத்து மனைவி மஞ்சுளா (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மஞ்சுளாவை கைது செய்து, அவரிடமிருந்து 2 கிராம் தங்க தாயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்