சாராயம் பதுக்கி வைத்த பெண் கைது
பிரம்மதேசம் அருகே சாராயம் பதுக்கி வைத்த பெண் கைது
பிரம்மதேசம்
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாளம் கிராமத்தில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் நல்லாளம் கிராமத்துக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதேபகுதி நெல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தானம் மனைவி அருள்(வயது 55) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள வாழை தோப்பில் விற்பனைக்காக 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 பாலிதீன் பைகளில் 120 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அருளை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.