சிதம்பரத்தில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த பெண் கைது

சிதம்பரத்தில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த பெண் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-01-08 18:45 GMT

சிதம்பரம், 

செங்கல்பட்டு மாவட்டம் காந்தி சாலையை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி ஹேமாவதி(வயது 81). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது கோவிலுக்குள் ஆதி மூலநாதர் உமையாள் மாரியம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ ஒருவர், ஹேமாவதி கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தார்.

கைது

இதுகுறித்து ஹேமாவதியின் மருமகன் ராஜசேகரன் சிதம்பரம் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஹேமாவதியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தது சேலத்தை சேர்ந்த சத்யராஜ் மனைவி பூமிகா (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து பூமிகாவை பிடித்து விசாரித்ததில் அவர் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பூமிகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்