அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கோரைக்குழி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கோரைக்குழி வடக்கு தெருவை சேர்ந்த அம்பிகா (வயது 48) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பிகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.