மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது
மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் கடந்த 22-ந் ேததி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தா.பழூர் காளியம்மன் கோவில் தெருவில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிவேல் மனைவி செல்வி (வயது 45) என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இந்தநிலையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் தப்பி ஓடிய செல்வியை தா.பழூர் போலீசார் கைது செய்தனர்.