மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது
பூதலூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் கொடும்புறார் நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக பூதலூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் போில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று அந்த பகுதியை சேர்ந்த ஆலாயி (வயது38) என்பவர் வீட்டின் பின்பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாயியை கைது செய்தனர்.