கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் கைது

நெல்லையில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-06 19:29 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி ராஜாத்தி (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை டவுன் வயல்தெரு அருகே உள்ள மணிப்புரத்தில் வசித்து வந்தார். அப்போது வயல்தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி மணிமேகலை (42) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினாராம். அதற்காக அவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னா் அவர் வீடுமாறி கீழப்பாட்டத்துக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று டவுன் பகுதிக்கு சென்ற ராஜாத்தியை வழிமறித்த மணிமேகலை, நீ இன்னும் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கூறி கந்துவட்டி கேட்டு சாதி பெயரை சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜாத்தி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மணிமேகலை மீது கந்துவட்டி உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்