முதியவரை தாக்கிய பெண் கைது

முதியவரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-23 19:00 GMT

விராலிமலை தாலுகா, வடக்கு சோழியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 80). இவருக்கும் இவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுப்பையா தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள விறகுகளை வெட்டியுள்ளார். அப்போது அங்கு சென்ற பால்ராஜ் மனைவி தனம் (40) இந்த இடமும் அதில் உள்ள விறகுகளும் எங்களுக்கும் பங்கு உள்ளது. நீங்கள் எப்படி வெட்டலாம் என்று சுப்பையாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறின்போது முதியவர் சுப்பையாவை கையாலும் குச்சியாலும் தனம் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுப்பையா மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து முதியவர் சுப்பையாவை தாக்கிய தனத்தை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்