மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்
போதிய இடவசதி இ்ல்லாததால் சேதுபாவாசத்திரம் மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம் உள்ளது. எனவே புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதிய இடவசதி இ்ல்லாததால் சேதுபாவாசத்திரம் மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம் உள்ளது. எனவே புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் 1 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 285 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள 6 வகுப்பறை கட்டிடங்களில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் போதிய இடவசதி இ்ல்லாததால் மாணவர்களை வகுப்பறையில் வைத்து பாடம் நடத்தமுடியாத நிலை உள்ளது.
மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்
இதனால் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் மழை, வெயில் நேரங்களில் சிரமப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். எனவே மாணவர்கள் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.