பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் திசை மாறுகின்றனர்

கணவன்-மனைவி பிரிந்து வாழ்வதால் பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் திசை மாறுகின்றனர் என்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேசினார்.

Update: 2023-08-30 21:00 GMT


பொள்ளாச்சி


கணவன்-மனைவி பிரிந்து வாழ்வதால் பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் திசை மாறுகின்றனர் என்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேசினார்.


மனைவி நல வேட்பு விழா


பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் மனைவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மனைவி நல வேட்பு விழா நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தம்பதியினர் மலர், பழங்களை கொடுத்து பறிமாறிக் கொண்டனர். விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துகொண்டு மனைவின் மாண்பு குறித்து பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-


குடும்ப என்கிற அமைப்பு தான் மனித நாகரீகத்தின் எழுச்சியை ஏற்படுத்தியது என்று மானுடவியல் வல்லுனர்கள் நமக்கு தெரிவிக்கின்றனர். ஒரு சமூகம் செழித்து வளர கணவன், மனைவி இருவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்ப அமைப்பே ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்பவர்களாக, அறிந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பார்ப்பது காதல் அல்ல. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே காதல்.


தனித்த குடும்பங்கள்


ஒரு காலக்கட்டத்தில் விரிவான கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. நாளடைவில் குடும்பங்கள் பிரிந்து சித்தப்பா, பெரியப்பா இல்லாமல் அண்ணன், தம்பி இருக்கும் கூட்டுக்குடும்பங்கள் உருவாகின. தற்போது அதுவும் மாறி விட்டன. பணி நிமித்தம் காரணமாக தனி குடும்பங்கள் வந்து விட்டன. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். தாத்தா-பாட்டி வேறொரு ஊரில் இருப்பார்கள்.


தற்போது புதிதாக வந்திருப்பது தனித்த குடும்பங்கள். பல இடங்களில் ஒரே வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்கின்றனர். இப்போது பல இடங்களில் சமூகத்திற்கு சவாலாக அமைவது ஒற்றை குடும்பங்கள். கணவன், மனைவி பிரிந்து செல்வதால் குழந்தைகள் தாயிடமோ, தந்தையிடமோ தேங்கி விடுகின்றனர்.


இதனால் தாய்-தந்தையின் அரவணைப்பு இல்லாமல் ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே பார்த்து வளர்வதால் மன வளர்ச்சி தேக்கம் ஏற்படுகிறது. இதனால் சமூகத்தில் இந்த குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள், எந்த திசையில் செல்வது என்று தடுமாறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


---


Tags:    

மேலும் செய்திகள்