தகுதி சான்றிதழ் இல்லாமல்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் பறிமுதல்

கோவில்பட்டியில் தகுதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-07-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய வேனில் அனுமதி சீட்டு, தகுதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட குழந்தைகளை அவரவர் வீடுகளில் இறக்கி விடச்செய்த அலுவலர்கள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட டிப்பர் லாரி ஒன்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த 2 வாகனங்களுக்கும் தலா ரூ.15,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்