12 மணி நேரம் வேலை சட்ட மசோதா வாபஸ்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ நன்றி

8 மணி நேர வேலை என்பதை உலகத் தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி உயிர்ப்பலிகளைக் கொடுத்து பெற்ற உரிமையாகும்.

Update: 2023-05-01 12:55 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே தினத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கின்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம்-2023, சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

8 மணி நேர வேலை என்பதை உலகத் தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி உயிர்ப்பலிகளைக் கொடுத்து பெற்ற உரிமையாகும். அதனைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசு தொழிலாளர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என்பதை முதல்-அமைச்சர் பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, தேசிய முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜி.ஜி.சிவாவும் முதல்-அமைச்சருக்கு பாராட்டுத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்