ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வெற்றிப்பெற வாழ்த்துகள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்.

Update: 2022-09-07 14:36 GMT

புதுடெல்லி,

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். இந்த நடைபயணத்தை காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது ராகுல் காந்தி நடைபயணத்திற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

இன்று, என் சகோதரர் ராகுல் காந்தி இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், நமது குடியரசின் உயர்ந்த இலட்சியங்களை நிலைநிறுத்தவும், நம் நாட்டு மக்களை அன்புடன் ஒன்றிணைக்கவும் ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ளார்..

சமத்துவச் சிலை தலை நிமிர்ந்து நிற்கும் குமரியை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்தியாவின்  பெரிய கட்சி, இந்தியாவை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க ஒரு கடினமான பணியை மேற்கொண்டுள்ளது.' ஒற்றுமை நடைபயணம் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்