ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்

Update: 2023-06-01 20:43 GMT

கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், 'கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் எக்கத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான சந்தோஷ் (வயது 23) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தோசை போலீசார் நேற்று கைது செய்ததுடன், மாணவியையும் மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்