மின்சாரம் தாக்கி வயர்மேன் படுகாயம்
முனைஞ்சிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி வயர்மேன் படுகாயம் அடைந்தார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி மின்சார வாரியத்தில் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பதைக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவர் தற்காலிக வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பாப்பான்குளத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த சரவணன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.