ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி

ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

Update: 2023-04-05 10:21 GMT

திருப்பதூர்,

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

மாத்திரையை உடைக்காமல் சிறுமி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும். மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்