மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

Update: 2022-10-01 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தி பிறந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை), 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களையும் மதுபானம் விற்பனை இல்லாத நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபான கூடங்கள் அனைத்தும் 2 நாட்களும் மூடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்