சாராயம் விற்ற பெண் கைது
மணல்மேடு அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மணல்மேடு.
மணல்மேடு அருகே உள்ள அதிமானபுருஷன் நடுத்தெருவில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீசார் அதிமானபுருஷன் நடுத்தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே ஊர் காலனித்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மணிமேகலையை(வயது60) கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.