திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் அருகே உள்ள மாரநேரியில் மது விற்பனை நடைபெறுவதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பூதலூர் போலீசார் மாரநேரி பகுதியில் தீவிர சோதனை நடத்தினார். அப்போது மாரநேரி மந்தை பகுதியில் கடம்பன்குடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன் (வயது40) மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.