நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
வடகாடு அருகே கீழாத்தூர் நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மக்கள் நோய் நொடி இன்றியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து வளரவும் வேண்டி மது எடுப்பு விழா நடந்தது. இதில் கீழாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மது குடங்களை எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.