செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.