மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

சுவாமிமலை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முதியவரை கைது செய்தனர்.

Update: 2022-10-21 20:19 GMT

கபிஸ்தலம், அக்.22-

சுவாமிமலை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முதியவரை கைது செய்தனர்.

மதுபாட்டில்கள்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்புறம்பயம் கடைத்தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவரை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர் திருப்பறம்பயம் அண்ணா ரைஸ் மில் தெருவை சேர்ந்த பாட்டாரு(வயது 60) என்பதும் அவர் மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வந்ததும் ெதரிய வந்தது.

கைது

அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து பட்டாருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்