தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு கொடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-10 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் நடந்த தி.மு.க. 15-வது தேர்தலில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவர், தி.மு.க. துணை பொதுச் செயலாளராக தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி.யை நியமித்து உள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட கனிமொழி எம்.பி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்